பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை சேர்க்க அவகாசம் நீட்டிப்பு- அதிகாரி தகவல்

பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.சிறப்பு வாய்ப்பாக பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை சேர்க்க அவகாசம் நீட்டிப்பு- அதிகாரி தகவல்
Published on

சென்னை:

பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கும், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுவாகவே பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

அதன் பின்னர் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படாது. இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்தவர்களும், அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

தற்போது இறுதி வாய்ப்பாக வருகிற செப்டம்பர் 26-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைவரும் பெயர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதுதொடர்பான பரிந்துரைகளை பிறப்பு, இறப்பு பதிவு தலைமை பதிவாளர் அரசுக்கு அனுப்பியிருந்தார். அதனை பரிசீலித்த அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com