மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்த வெடி மருந்து வெடித்து மளிகை கடை சேதம்

மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்த வெடி மருந்து வெடித்து மளிகை கடை சேதம்
Published on

மேல்மலையனூர்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் சிவகாசி, குட்டி. இவர்கள் வேட்டைக்காக வெடிமருந்தை தங்களுடைய மோட்டார் சைக்கிளில் வைத்திருந்தனர். இந்த வண்டியை இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள ஒரு மளிகை கடையின் முன்பு நிறுத்தி இருந்தனர். திடீரென இதிலிருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் மோட்டார் சைக்கிள் மற்றும் மளிகை கடையிலிருந்த கண்ணாடி, திண்பண்டங்கள் சேதமடைந்தன. மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com