கடந்த ஆண்டை போலவே என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் கூடிய மவுசு

விண்ணப்பக் கட்டணம் செலுத்த மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போலவே என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் கூடிய மவுசு
Published on

2026-27-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (மே) 3-ந் தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். தினமும் குறைந்தது 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதன்படி, முதலில் கடந்த 2-ந்தேதி வரை விண்ணப்பப்பதிவு செய்வதற்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவகாசம் நீட்டிக்கப்பட்டு நேற்றுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது.

நேற்று மாலை 6 மணி வரையிலான நிலவரப்படி, 3 லட்சத்து ஆயிரத்து 519 விண் ணப்பங்கள் வந்து இருக்கின்றன. விண்ணப்பங்கள் இந்த எண்ணிக்கையில் இருந்தாலும், விண்ணப்பக் கட்டணம் செலுத்துபவர்களே என்ஜினீயரிங் படிப்பு காலி இடங்களுக்கு போட்டி போடுபவர்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

அந்தவகையில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 476 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும். அவர்களில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 599 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு நேற்று இரவு வரை நீடித்தது. விண்ணப்பக் கட்டணம் செலுத்த மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

விண்ணப்பப் பதிவு நேற்று இரவு வரை நீடித்தது. விண்ணப்பக் கட்டணம் செலுத்த மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 2020-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல வரவேற்பு இருந்தது. இடையில் என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காது போகவே அதன் மவுசு குறையத் தொடங்கியது. என்ஜினீயரிங் படிப்பு காலி இடங்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.

இந்த சூழலில் தற்போது தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் என்ஜினீயரிங்கில் கோலோச்சத் தொடங்கியுள்ளன. அதற்கான வேலைவாய்ப்புகளும் தொழில்நுட்ப உலகில் திறந்து கிடக்கின்றன. இதன் காரணமாக சமீபஆண்டுகளாக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மீண்டும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு (2025) 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 2.44 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும், 2.24 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் இருந்தனர். கடந்த ஆண்டை போலவே, நடப்பாண்டிலும் விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com