தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு - குன்னூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குன்னூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு - குன்னூரில்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Published on

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் ஓட்டு போடுவதற்காக அனுமதி தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளதால் நேற்று மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதியிலும் பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டு போட்டனர்.

குன்னூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு வாக்குப்பதிவை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் துரிதமாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவருடன் குன்னூர் சப் கலெக்டர் சங்கீதா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com