தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டன

தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டன
Published on

தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கமான நிர்வாக பணிகளை மேற்கொள்ளவும், புதிய திட்டங்களை அறிவிக்கவும் அரசுக்கு இனி எந்தத் தடையும் இல்லை.

கடந்த மார்ச் மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், புதுவை யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலும் குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் இடைத்தேர்தல் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

தற்போது வாக்குப்பதிவு முடிந்த மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.இந்த நிலையில், 5 மாநிலங்கள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முழுவதும் விலக்கி கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடத்தை விதிகள் அமலில் இருந்த போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் வழக்கம்போல அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com