தமிழ்நாட்டில் 37 நாட்களாக நடந்த தேர்தல் பரப்புரை ஓய்ந்தது!

தமிழ்நாட்டில் இன்றும் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் 37 நாட்களாக நடந்த தேர்தல் பரப்புரை ஓய்ந்தது!
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே.4ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரசாரம் நிறைவு செய்யப்பட வேண்டும். அதன்படி இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

இன்று இறுதி பிரசார நாள் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். புதிதாக கட்சித் தொடங்கி தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துடன் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் தனது இறுதிப் பிரசாரத்தை மேற்கொண்டு நிறைவு செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தொகுதியில் இறுதியாக பிரசாரம் மேற்கொண்டு 6மணிக்குள் முடித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com