நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5.20 ஆக நிர்ணயம்

கடந்த நவம்பர் மாதம் ஒரு முட்டை விலை ரூ. 5.50 ஆக இருந்தது. முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5.20 ஆக நிர்ணயம்
Published on

நாமக்கல்:

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த நவம்பர் மாதம் ஒரு முட்டை விலை ரூ. 5.50 ஆக இருந்தது. பின்னர் முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், இம்மாதம் 4-ந் தேதி முட்டை விலை 5 பைசா உயர்ந்து ரூ. 4.80 ஆனது. 5-ந் தேதி மேலும் 5 பைசா உயர்ந்து ரூ. 4.85 ஆனது. 6-ந் தேதி மீண்டும் 5 பைசா உயர்ந்து ரூ. 4.90 ஆனது. 7-ந் தேதி மேலும் 5 பைசா உயர்ந்து ரூ. 5 ஆனது. 8-ந் தேதி மீண்டும் 5 உயர்த்தப்பட்டு ரூ. 5.10 ஆனது.

இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை தொடர் உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-

சென்னை-570, பர்வாலா-550, பெங்களூரு-565, டெல்லி-577, ஐதராபாத்-540, மும்பை-600, மைசூர்-552, விஜயவாடா-550, ஹொஸ்பேட்-525, கொல்கத்தா-550.

பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 76 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com