த.வெ.க-வுக்கு ஆதரவு இல்லை: டி.டி.வி. தினகரன்

த.வெ.க.வுக்கு கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ், விசிக ஆதரவு கொடுத்துள்ள நிலையில், அமமுக ஆதரவு அளிக்காது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
த.வெ.க-வுக்கு ஆதரவு இல்லை: டி.டி.வி. தினகரன்
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் டி.டி.வி. தினகரின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. 11 தொகுதியில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மன்னார்குடி தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. அந்த கட்சியின் எஸ். காமராஜ், திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை 1566 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தேர்தல் முடிவில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதால் 119 எண்ணிக்கையுடன் ஆட்சி அமைக்கிறார் விஜய்.

இந்த நிலையில் ஒரு இடத்தை வைத்துள்ள அ.ம.மு.க. த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com