சென்னையில் தொடரும் சம்பவம்- 6 வயது சிறுவனை கடித்த நாய்

காயமடைந்த சிறுவன் ஹரீஷ் குமாருக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நாயின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தொடரும் சம்பவம்- 6 வயது சிறுவனை கடித்த நாய்
Published on

சென்னை:

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வீட்டின் கீழே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவனை பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்துக் குதறியது.

கே.பி. பார்க் பகுதியில் நடைபயிற்சிக்கு நாயை அழைத்து சென்றபோது சிறுவனை கடித்துக் குதறியது.

காயமடைந்த சிறுவன் ஹரீஷ் குமாருக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது நாய் கடித்த சம்பவம் சென்னையில் மீண்டும் அரங்கேறியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நாயின் உரிமையாளர் ஸ்டெல்லா உட்பட 3 பேர் மீது பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com