அந்த பிராண்ட் சரக்கை குடிக்காதீங்க- டாஸ்மாக் அறிவிப்பால் மதுபிரியர்கள் அதிர்ச்சி

டாஸ்மாக் கடைகளில் இந்த வகை மதுபானம் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் மதுபான கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்பிராந்தியை குடித்து பழகிய மதுபிரியர்களுக்கு ‘டாஸ்மாக்' நிர்வாகத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அந்த பிராண்ட் சரக்கை குடிக்காதீங்க- டாஸ்மாக் அறிவிப்பால் மதுபிரியர்கள் அதிர்ச்சி
Published on

சென்னை:

'டாஸ்மாக்' கடைகளில் பல்வேறு ரகங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விற்பனை வரும் முன்பு மதுபான வகைகளின் தரங்கள் பரிசோதிக்கப்படுகிறது.

இதில் கடந்த 2021-ம் ஆண்டுக்குரிய 'கோல்டன் வாட்ஸ் நம்பர் 1 பிராந்தி' விற்பனைக்கு உகந்தது அல்ல என்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து 'டாஸ்மாக்' கடைகளில் இந்த வகை மதுபானம் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட மதுபான கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று 'டாஸ்மாக்' கடை ஊழியர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளனர். இந்த பிராந்தியை குடித்து பழகிய மதுபிரியர்களுக்கு 'டாஸ்மாக்' நிர்வாகத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்த பிராந்தியை தயாரிக்கும் நிறுவனம் மன்னார்குடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com