கோவை தெற்கில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 105 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.
கோவை தெற்கில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி
Published on

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 105 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. திமுக 57, அதிமுக 46 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில் கோவை தெற்கில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். அவர் 53,165 வாக்குகள் பெற்று 4,990 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளார்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சக்கரபாணி வெற்றி பெற்றுள்ளார். அவர் 65,152 வாக்குகள் பெற்று 28,827 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com