

சென்னை:
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழும், தமிழ்நாடு அரசுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடனும், எண்ணெய் நிறுவனங்கள், ஒரு ஒருங்கிணைந்த மற்றும் முன்கூட்டிய முயற்சியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, தடையற்ற எல்பிஜி கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசு, 5 கிலோ இலவச வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் தினசரி இருப்பை இரட்டிப்பாக்கி உள்ளது. இது குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பிற இடம்பெயரும் மக்களுக்குப் பயனளிக்கும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மாநில அரசுத்துறைகளுடன் வலுவான ஒருங்கிணைப்பின் மூலம் இந்த மேம்படுத்தப்பட்ட ஒதுக்கீடு திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தொழில் மையங்கள், கட்டுமானத் தளங்கள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகள் உள்ளிட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு எல்பிஜி விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டு, 5 கிலோ சிலிண்டர்கள் எந்தவித சிரமமுமின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இத்தகவலை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான எண்ணெய் தொழில்துறையின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் தெரிவித்து உள்ளார்.