திம்பம் சாலையில் இரவில் நடந்து சென்ற சிறுத்தை- வாகன ஓட்டிகள் அச்சம்

சிறுத்தை பின்னால் அந்த நபர் மெதுவாக காரை ஓட்டி சென்றார்.
Leopard
Published on: 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

திம்பம் மலைப்பாதையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மலைப்பாதையில் உள்ள சாலையோரம் சிறுத்தை ஒன்று சாவகாசமாக நடந்து சென்றது. சிறுத்தை பின்னால் அந்த நபர் மெதுவாக காரை ஓட்டி சென்றார். அந்த சிறுத்தை நெடுஞ்சாலையை கடந்து சாலையோரம் மெதுவாக நடந்து சென்றது. சிறிது நேரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை பின்னர் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரை தாண்டி வனப்பகுதிக்குள் சென்றது.

இந்த காட்சிகளை அந்த வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com