லாரி டிரைவர்களிடம் மாமூல்: தர்மபுரியில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்!

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வசூலித்த புகாரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 காவலர்களை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.எஸ். மகேஸ்வரன் பணி இடைநீக்கம் செய்தார்.
லாரி டிரைவர்களிடம் மாமூல்: தர்மபுரியில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்!
Published on

பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில், வழக்கமான வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வந்த காவலாளர்கள் அந்த வழியாக வந்த சரக்கு லாரிகள் மற்றும் கால்நடைகள், காய்கறிகள் ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி டிரைவர்களிடம் கட்டாயமாக மாமூல் வசூலித்துள்ளனர்.

இந்நிலையில் லாரி டிரைவர்களிடம் பணம் வாங்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை ரகசியமாக லாரி டிரைவர்கள் பதிவு செய்தனர்.

இந்த வீடியோ தனியார் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகவல் அறிந்து வந்த தர்மபுரி மாவட்ட எஸ்.பி மகேஸ்வரன் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

முதற்கட்ட விசாரணையில் போலீசார் மாமூல் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து செல்வபதி - சப் இன்ஸ்பெக்டர், வெங்கடேசன் மற்றும் பரதன் - போலீஸ் ஏட்டு ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்வதற்கு உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பான விசாரணையில் உயர் அதிகாரிகள் தரப்பில் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com