

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வருகிற 4-ந்தேதி 'அக்னி நட்சத்திரம்' என்ற கத்திரி வெயில் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:
* தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளது.
* சூப்பர் எல் நினோ நிகழ்வால் இயல்புக்கு மாறாக ஆகஸ்ட் வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
* வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஒருவாரத்திற்கு முன்னதாக மே 23 முதல் 25-ந்தேதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளது.
* பருவமழை முன்னதாக தொடங்கினாலும் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை அளவு இயல்பைவிட குறைவாகவே பதிவாகும்.
* தமிழ்நாட்டில் சராசரியாக 33 செமீ பருவமழை இந்தாண்டு குறைவாகவே பதிவாகும்.
* கத்திரி வெயில் காலகட்டம் என்று சொல்லக்கூடிய மே 4 முதல் 28-ந்தேதி வரை கடும் வெயில் கட்டுக்குள் இருக்கும்.
* கத்திரி வெயில் காலத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால் வெயில் கட்டுக்குள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.