உயிருடன் உள்ள மாமனாருக்கு இறப்பு சான்று வாங்கிய மருமகள்- போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார்

போதராஜ்
Published on

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா முசுவனூத்து அருகே முத்தக்கம்மாபட்டியை சேர்ந்தவர் போதராஜ் (வயது 70). விவசாயி. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி, முத்துக்குமார் (46), சரவணன் (42) ஆகிய மகன்களும், விமலா (40) என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். போதராஜ் மனைவி ஜெயலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டார்.

போதராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1 கோடி மதிப்பிலான விவசாய நிலங்கள் மற்றும் சொத்துகளை மூத்த மகன் முத்துக்குமாருக்கு தானமாக எழுதிக் கொடுத்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முத்துக்குமாரும் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.

போலீசில் புகார்

தான் உயிருடன் இருக்கும் போதே தனக்கு இறப்பு சான்று வழங்கிய விவகாரம் குறித்து தகவல் கிடைக்கவே போதராஜ் இதுகுறித்து வருவாய்துறை அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.

இதனால் தனக்கு இறப்புச்சான்று வழங்கிய அதிகாரிகள் மற்றும் விண்ணப்பம் அளித்த மருமகள் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிலக்கோட்டை போலீஸ் நிலையம், மாவட்ட எஸ்.பி., மாவட்ட கலெக்டர், முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு போதராஜ் புகார் மனு அனுப்பி உள்ளார். இச்சம்பவம் நிலக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com