ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

நாளைமுதல் ஜூலை.7 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!
Published on

நடப்பு கல்வியாண்டில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு 30.06.2026 முதல் 07.07.2026 வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் www.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com