

சென்னையில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
* நாடாளுமன்ற தேர்தலின் போதும் இபிஎஸ் தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யவில்லை.
* வலிமையான கூட்டணியை அமைக்க மறுத்த காரணத்தால் தேர்தலில் தோல்வி அடைந்தோம்.
* அதிமுகவின் வாக்கு வங்கியும் கடுமையாக சரிந்து வருகிறது.
* நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபோதும் 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினோம்.
* பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் அதை இபிஎஸ் ஏற்கவில்லை.
* தேர்தலுக்கு முன்னர் தவெகவுடன் கூட்டணி வைக்க நாங்கள் வலியுறுத்தினோம்.
* தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த போதும் அதனை இபிஎஸ் மறுத்தார்.
* தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளையும் இபிஎஸ் மதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.