

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அண்மைக்கால அதிரடி அறிவிப்புகள் மற்றும் கருத்துகளுக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சண்முகம் தனது காரசாரமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
உலகளாவிய அரசியல் மற்றும் கொள்கை முடிவுகளில் அமெரிக்கா எடுத்து வரும் ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டித்து, சிபிஎம் தலைவர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், உலகத்திற்குத் தான் மட்டும்தான் ஒரே தலைவன் என்ற அகம்பாவத்திலும் மமதையிலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப செயல்பட்டு வருவதாக மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், "உலகத்திற்கே தான் தான் தலைவன் என்ற நினைப்பில் கம்யூனிசத்தை ஒழித்தே தீருவேன் என்று டிரம்ப் கொக்கரிக்கிறார்" என்று சுட்டிக்காட்டிய சண்முகம், டிரம்பை நோக்கி மிக ஆக்ரோஷமான வார்த்தைகளால் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபருக்கு நேரடி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய அவர், "உங்கள் வாய்க்கொழுப்புதான் உங்களுக்கு முதல் எதிரி" என்று மிக ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
ஏகாதிபத்திய சிந்தனையோடு மற்ற நாடுகளின் இறையாண்மையைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் டிரம்பின் இத்தகைய ஆணவப் பேச்சுக்களும், வாய்க்கொழுப்பும்தான் சர்வதேச அரங்கில் அமெரிக்காவிற்கும், அவருக்கும் மிகப்பெரிய பின்னடைவாகவும் முதல் எதிரியாகவும் மாறப்போகிறது என்று சண்முகம் தனது அறிக்கைளில கூறியுள்ளார்.