தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி- மக்களவையில் கனிமொழி எம்.பி உரை

மத்திய அரசின் குரலை ஏற்று தென்மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளன.
தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி- மக்களவையில் கனிமொழி எம்.பி உரை
Published on

தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீதான விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் 8 கோடி மக்களின் குரலாக மக்களவையில் உரையாற்றி கொண்டிருக்கிறேன்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக நேற்று தான் அரசிதழில் வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும்போதே அரசிதழில் வெளியிட வேண்டியது ஏன்?

அரசிதழில் வெளியானதற்கு பிறகு எதற்காக இந்த விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?

தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி.

மத்திய அரசின் குரலை ஏற்று தென்மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளன.

5 மாநில தேர்தல் பணிகளை குலைக்கவே அவசர அவசரமாக மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com