

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஜோதிட ஆலோசகரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ரோம் அரசர் கலிகுலா மற்றும் அவரது குதிரை இன்சிடாடஸை குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் இவ்வாறு மறைமுகமா விமர்சிக்க, அக்கட்சியின் மற்றொரு எம்.பி.யான சசிகாந்த் செந்திலும் இதனை விமர்சித்துள்ளார். பண்டிட் நியமனம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,
"எனக்கும் புரியவில்லை. ஒரு ஜோதிடருக்கு ஏன் OSD (Officer on Special Duty - சிறப்புப் பணி அதிகாரி) பதவி தேவைப்படுகிறது? யாராவது விளக்க முடியுமா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி. ஜோதிமணி,
“பெரியாரை கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள த.வெ.க வின் அரசில் தனது ஜோதிடரை முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி பொறுப்பில் நியமித்துள்ளதை முதலமைச்சர் ஜோசப் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவதை தவிர்ப்பது நல்லது.” எனப் பதிவிட்டுள்ளார்.
யார் கலிகுடா?
தன்னை ஒரு கடவுளாக வணங்க வேண்டும் என்று செனட்டர்களைக் கட்டாயப்படுத்தியவர் ரோமானியப் பேரரசின் மூன்றாவது பேரரசர் கலிகுலா. அத்தகைய அரசர் தனது விருப்பமான குதிரையான இன்சிடாடஸை தன்னுடைய தூதராகவும் நியமிக்க முற்பட்டார்.
இந்த இன்சிடாடஸ் பளிங்குக்கல்லால் ஆன தொழுவத்தில்தான் வசித்ததாம். அதற்குப் பணிவிடை செய்ய 18 வேலைக்காரர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அது விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கழுத்துப்பட்டை மற்றும் அரச குடும்பத்தினர் அணியும் ஊதா நிற ஆடைகளைதான் அணியுமாம்.