முறைகேடு புகார்..! சென்னையில் நடைபாதை திட்டப் பணிக்கான டெண்டர்கள் ரத்து

நடைபாதைக்கான விரிவான திட்ட அறிக்கை மறு ஆய்வு செய்யப்படும் என தகவல்.
Foot pathway
Published on

சென்னை முழுவதும் நடைபாதை அமைப்பதற்காக ரூ.284 கோடி மதிப்பில் போடப்பட்ட டெண்டர்கள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடைபாதை அமைக்கும் திட்டங்களில் பல முறைகேடுகள் உள்ளதாக புகார் எழுந்த நிலையில் 35 டெண்டர்களை மாநகராட்சி ரத்து செய்தது.

சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர் அமைக்கப்பட்டதாக புகார் எழுந்ததால் ரத்து செய்யப்பட்டது.

ஒரு மீட்டருக்கு நடைபாதை அமைக்க வழக்கமான விலையை விட 4 மடங்கு அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நடைபாதைக்கான விரிவான திட்ட அறிக்கை மறு ஆய்வு செய்யப்பட்டு, திருத்தங்களுடன் மீண்டும் வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com