கலாசேத்ரா ஆசிரியருக்கு எதிரான புகார்- விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு

முன்னாள் மாணவி அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும்.புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவு.
கலாசேத்ரா ஆசிரியருக்கு எதிரான புகார்- விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு
Published on

கலாசேத்ரா பாலியல் தொல்லை புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாசேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கலாசேத்ரா அறக்கட்டளையின் நடன ஆசிரியர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக மற்றொரு மாணவி சென்னை காவல்துறையில் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், விளம்பரத்திற்காக புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தால் புகார்தாரர் மீது நடவடிக்கை வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com