கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 48 ஆண்டுகள் ஜெயில்

சிறுமியை கற்பழித்த வாலிபர் ரோஜின்.டி.ராஜூவுக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ரோஜின்.டி.ராஜூ
ரோஜின்.டி.ராஜூ
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் திருவல்லா நகரை சேர்ந்தவர் ரோஜின் டி.ராஜூ(28).  இவர்  கடந்த 2016&ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் திருவல்லா போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் போக்சோ சட்டத்தில் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

 நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார், சிறுமியை கற்பழித்த வாலிபர் ரோஜின்.டி.ராஜூவுக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.தொடர்ந்து போலீசார் வாலிபரை பத்தனம்திட்டா சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com