பீளமேட்டில் வீடு புகுந்து 30 பவுன் நகைகள் கொள்ளை

கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்யும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Jewelry Robbery
நகைகள் கொள்ளை
Published on

பீளமேடு நேரு நகரை சேர்ந்த குப்புசாமி (வயது 65) என்பவர் நேற்று இரவு வீட்டின் முன்புற கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு சாவியை பத்திரப்படுத்திவிட்டு படுக்கை அறைக்கு சென்று தூங்கினார்.

நகைகள் கொள்ளை

இதனை முன்கூட்டியே நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியாக கையை உள்ளே விட்டு சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டிற்குள் புகுந்தார். அதன்பிறகு குப்புசாமி தூங்கிய பக்கத்து அறைக்கு சென்ற திருடன் அங்கு இருந்த பீரோவை நைசாக திறந்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பி சென்று விட்டார். இந்த நிலையில் குப்புசாமி இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதும், பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போனதும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

பின்னர் இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் வீட்டின் கதவு, சாவி, ஜன்னல் மற்றும் பீரோவில் படிந்து இருந்த கொள்ளையனின் கைரேகைகளை தடயவியல் துறை நிபுணர்கள் சேகரித்து சென்றனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணிகள் நடைபெற்றன.

தொடர்ந்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்யும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com