சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட குற்றவாளி - திடுக்கிடும் தகவல்கள்

மோகன்ராஜின் வீட்டின் அருகே சிறுமி விளையாடி கொண்டிருப்பதை கார்த்தி பார்த்துள்ளார்.
சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட குற்றவாளி - திடுக்கிடும் தகவல்கள்
Published on

கோவை மாவட்டம் சூலூர் அருகே 5-ம் வகுப்பு மாணவி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் குடும்பம் முதலில், போத்தனூர் நம்பி நகரில் வசித்து வந்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் இவர்கள் சூலூர் பள்ளபாளையம் அருகே உள்ள கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இவர்கள் வீட்டின் அருகே கைதான மோகன்ராஜ் வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு கட்டிட தொழிலாளியான கார்த்தி அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

அப்போது மோகன்ராஜின் வீட்டின் அருகே சிறுமி விளையாடி கொண்டிருப்பதை கார்த்தி பார்த்துள்ளார். பின்னர் சிறுமியிடம் சென்று பேசியும் உள்ளார். அதன்பின்னர் அவர் சிறுமிக்கு அடிக்கடி சாக்லெட் வாங்கி கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று சிறுமியின் தந்தை வேலைக்கு சென்றுவிட்டார். தாயார் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். சிறுமி, தனது தம்பியுடன் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அங்குள்ள கடைக்கு சிறுமி சென்றார்.

அப்போது, அங்கு நின்றிருந்த கார்த்தி, சிறுமியிடம் நைசாக பேசி சாக்லெட் தருவதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, சிறுமியை கொலை செய்து, உடலை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் வீசி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com