கோவையில் கடத்தப்பட்ட 10 வயது சிறுமி சடலமாக மீட்பு.. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை?

வீட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள குளத்தில் சிறுமியின் உடலை சடலமாக மீட்டுள்ளனர்.
கோவையில் கடத்தப்பட்ட 10 வயது சிறுமி சடலமாக மீட்பு.. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை?
Published on

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனதால், காவல் நிலையத்தில் பெற்றோர் புகைரளித்திருந்தனர்.

வழக்குப் பதிந்து 3 தனிப்படை அமைத்து சிறுமியை தேடிய போலீசார், வீட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள குளத்தில் சிறுமியின் உடலை சடலமாக மீட்டுள்ளனர்.

சிறுமியை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com