Kovai: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.. கோவையில் பட்டப்பகலில் பயங்கரம்

கார்த்திக் மேல் 31க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Kovai: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.. கோவையில் பட்டப்பகலில்  பயங்கரம்
Published on

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.

இவரின் மகள் சென்னையில் தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். அங்கு அவருக்கு கார்த்திக் (எ) மாரியப்பன் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது .

ஆனால் கார்த்திக் மேல் 31க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதை அறிந்த இளம்பெண் அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.

ஆனால் கார்த்திக், தன்னை காதலிக்கும்படி பெண்ணை தொடர்ந்து செல்போன் மூலமும் நேரிலும் நச்சரித்து வந்துள்ளார்.

ஆனால் பெண் திட்டவட்டமாக மறுக்கவே, நேற்று மாலை தன் 3 நண்பர்களுடன் கோவை தொண்டாமுத்தூரில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு பைக்கில் சென்ற கார்த்திக் வீட்டு வாசலில் வைத்து பெண்ணின் தந்தை சுந்தரமூர்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர்ந்து கையேடு எடுத்துவந்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களை வீட்டின் மேல் அந்த கும்பல் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியது.

வீசப்பட்டவற்றில் ஒரு பாட்டில், வீட்டின் போர்டிகோவில் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அங்கு தீவிபத்து ஏற்பட்டது.

இருப்பினும் பெரும் விபத்து தவரிக்கப்பட்டது. இதனையடுத்து சுந்தரமூர்த்தி, தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கார்த்திக் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com