

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என என தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கான +2 தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் நடந்தன.
மாநிலம் முழுக்க +2 தேர்வுகளை மொத்தம் 8.27 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். தேர்வை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 06-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடந்தது. இதனைத்தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி போன்ற அரசியல் சிக்கல்களால் நாளை தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வெளியாகாது என தகவல்கள் வெளியாகின .இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.