நாளை வெளியாகும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மனநல ஆசோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.
நாளை வெளியாகும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மனநல ஆசோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு!
Published on

தமிழ்நாட்டில் நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளநிலையில், மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் அரசு வழங்கும் எண்களை தொடர்புகொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

10- வகுப்பு (2025-26) பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026-ம் (நாளை) தேதியன்று வெளியிடப்படுகிறது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, 'டெலி கவுன்சிலிங்' தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com