சிங்கப்பெண் அதிரடிப்படை சேவையை நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

இன்று சட்டம், ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை.
சிங்கப்பெண் அதிரடிப்படை சேவையை நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
Published on

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தமிழக வெற்றிக் கழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிரத்யேக காவல் பிரிவு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.

இந்த சிறப்புப் பிரிவு ஐஜியாக பவானீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை சேவையை நாளை மறுநாள் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில், முதலமைச்சர் விஜய் திறந்துவைக்கிறார்.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இப்படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

மேலும் இன்று தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பாகத் தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜி ஆகியோருடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com