அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறு பேச்சு: ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது

ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் மாம்பலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் கிடையாது.
அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறு பேச்சு: ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது
Published on

சென்னை:

மாம்பலம் ராஜம்மாள் தெருவில் வசித்து வருபவர் ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன். 84 வயதான இவர் மாம்பலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் பற்றி அவதூறு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-

அம்பேத்கர்தான் அரசியல் அமைப்பை கொடுத்தார்னு பல பேரு எழுதி கிட்டு இருக்காங்க.. பேசிகிட்டு இருக்காங்க.. இப்ப இருக்கிற ஆட்சியாளர்களும் இதையே சொல்லிகிட்டு இருக்காங்க.. துதி பாடிகிட்டு இருக்காங்க.

அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும். அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவர், டைப் அடிச்சவர், டைப்புக்கு புரூப் பார்த்தவர் தான் அம்பேத்கர். அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக மாம்பலம் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆர்.பி.வி.எஸ். மணியனை நேற்று இரவு கைது செய்தனர். இன்று காலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அல்லி ஆர்.பி.வி.எஸ்.மணியனை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ஆர்.பி.வி.எஸ். மணியன் தரப்பில் முதுமை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பரிசீலிப்பதாக நீதிபதி அல்லி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com