சென்னையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞரை அம்மிக்கல்லால் அடித்துக் கொன்ற கும்பல்

காவல்துறையினர் இந்த வழக்கில் மெத்தனமாகச் செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.
சென்னையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞரை அம்மிக்கல்லால் அடித்துக் கொன்ற கும்பல்
Published on

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23). இவர் அப்பகுதியில் செயல்பட்டு வந்த கஞ்சா கும்பலை தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் அந்த கும்பல் அம்மிக்கல், பீர் பாட்டில்கள் மற்றும் சுத்தியலால் அடித்து அவரை கொடூரமாக கொலை செய்துள்ளது.

இந்த கொலையை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் காரணமாக தண்டையார்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறையினர் இந்த வழக்கில் மெத்தனமாகச் செயல்படுவதாகவும், கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதாக உறுதியளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com