ஆட்டோவில் பேசிய ரகசியம்.. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை

கணவரின் பென்ஷன் பணத்தை வைத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார் பொன்னம்மாள்.
ஆட்டோவில் பேசிய ரகசியம்.. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை
Published on

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று, வீட்டில் இருந்த நகை, பணங்களை திருடி சென்றவர்களை போலீசார் வலை வீசி தேடுகின்றனர்.

பொன்னம்மாள் என்ற மூதாட்டி அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு, துலுக்காத்தம் மன்கோவில் தெருவில் நீண்ட காலமாக வசித்து வருகிறார். பொன்னம்மாளின் கணவர் சென்னை துறைமுகத்தில் பணியாற்றியவர், சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் இறந்துள்ளார்.

இவர்களுக்கு 6 பெண்குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கணவரின் பென்ஷன் பணத்தை வைத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார் பொன்னம்மாள்.

இந்நிலையில், பொன்னம்மாளின் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த புது முகங்களை கண்ட அக்கம் பக்கத்தினர் பொன்னம்மாளின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பொன்னம்மாள் கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையிலும், முகம் முழுக்க காயங்களும் இருந்தன.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பயந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பரிசோதித்து பார்க்கையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதில் கழுத்தை நெரித்தும், கொடூரமாக தாக்கியும் கொலை செய்துள்ளனர் என்றும் தெரியவந்தது. மேலும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமணையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்க்கும்போது, 2 வாலிபர்கள் பொன்னம்மாளின் வீட்டிற்குள் வந்ததும், பொன்னம்மாளின் வீடு குறுகளானது என்றதும் சிறிது தூரத்திலேயே ஆட்டோவை நிறுத்தி விட்டு, பொன்னமாளை கொலை செய்து விட்டு எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி ஆட்டோவிற்கு தப்பி செல்லும் வழியில், ஆட்டோ மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதி விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆதாரத்தை வைத்து போலீசார் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போலீசாருக்கு கிடைத்த தகவலில், பொன்னம்மாளுக்கு சூரப்பட்டு பஸ்நிலையம் அருகே சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை சமீபத்தில் விற்றதாகவும், அந்த பணத்தை தனது 6 மகள்களுக்கும் தலா 5 லட்சம் கொடுத்துள்ளதாகவும் மீதம் 1 லட்சம் பணத்தை வீட்டில் வைத்து இருந்ததாக தெரியவந்தது.

பொன்னம்மாள் அருகில் உள்ள இடத்திற்கு சென்று விட்டு ஆட்டோவில் வந்துள்ளார். செல்போனில் ஒருவரிடம் இடம் விற்றதை பற்றியும், வீட்டில் 1 லட்சம் ரூபாயை வைத்துத்திருக்கிறேன் என்றும் பேசிக்கொண்டபோது ஆட்டோ டிரைவர் இதை கவனித்துவிட்டு பொன்னம்மாளை வீட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

இறக்கிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆட்டோ டிரைவர் தனது கூட்டாளிகளுடன் வந்து இதை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் பணத்திற்காகவா? இல்லையா வேறேதும் காரணமா? என போலீசார் பல கோணத்திலும் விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு கொடூரமாக கொன்று

நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com