பெரம்பூர் ரெயில் நிலையத்தில் கை, கால்கள் இல்லாமல் சூட்கேசில் எடுக்கப்பட்ட சடலம்: மனைவி பகீர் வாக்குமூலம்

தேனாம்பேட்டையைச் சேர்ந்த அமீர் அலியின் மீதி உடல் பாகத்தை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Chennai Murder Case: Amir Ali’s dismembered body in suitcase
Published on

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் சூட்கேசில் தலை மற்றும் கால்கள் இல்லாமல் சடலம் ஒன்று எடுக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொல்லப்பட்டவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த அமீர் அலி என தகவல் வெளியாகியானது.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட அமீர் அலியின் மனைவி ரஹிமா உள்பட இரண்டு பேர்களை கைது செய்து கிண்டி காவல் நிலையத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதான ரஹிமா, வட மாநிலங்கள் மற்றும் வங்க தேசத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வருபவர்களுக்கு இடவசதி செய்து தரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ரஹிமா அளித்த வாக்குமூலத்தில், “அமீர் அலி எனக்கு இரண்டாவது கணவர், அவர் பல பெண்களோடு உறவில் இருந்தார். அதைப்பற்றி கேட்டபோது எனது முதல் வாழ்க்கையை பற்றி பேசி என்னை அடித்தார்.

இதனால் எனக்கு தெரிந்த அஸ்லாம் அலியோடு சேர்ந்து என் கணவரை கொலை செய்தேன். என்னை ஏமாற்றிவிட்டு வேறு சிலரோடு இருப்பதை ஏற்று கொள்ள முடியாமல், மயக்க நிலையில் இருந்தபோது துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தேன்.

ஆத்திரத்தில் அவரின் ஆணுறுப்பையும் வெட்டி வீசினேன். அதன்பின்பு உடல்பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசுவதற்கு அஸ்லாம் எனக்கு உதவி செய்தார்” என்று கூறினார்.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தேனாம்பேட்டை மற்றும் கிண்டி பகுதிகளில் அமீர் அலியின் தலை மற்றும் கால் பகுதிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com