

தாம்பரம் - விழுப்புரம் இடையே மெமு ரெயில் சேவைகள் மாற்று ஏற்பாடு மற்றும் பகுதியளவு ரத்து செய்யப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து விழுப்புரம் இடையே பேரணி பணிமனையில் செவ்வாய்க்கிழமை (இன்று) பிற்பகல் 12.05 முதல் மாலை 3.35 வரை பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
இதனால் செவ்வைக்கிழமை விழுப்புரம் செல்லும் மெமு ரெயில் தாம்பரத்திலிருந்து காலை 9.40 க்கு புறப்பட்டு திண்டிவனம் வரையே மட்டும் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் விழுப்புரத்திருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயிலிற்கு பதிலாக பிற்பகல் 1.30 மணிக்கு திண்டிவனத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.
ஜோலார்பேட்டை - பெங்களூருக்கு இடையில் அரக்கோணம் பகுதியில் தண்டவாளப்பணிகள் நடைபெறவிருப்பதால் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜோலார்பேட்டையிலிருந்து கேஎஸ்ஆர் பெங்களூருக்கு செல்லும் மெமு ரெயில் சோமநாயக்கன் பேட்டையிலிருந்து புறப்படும்' என ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.