என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜாபர் சாதிக் ஜாமின் மனு மீது 17-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- போதைப்பொருள் கடத்திய வழக்கில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.
- விசாரணையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்ததால் அமலாக்கத்துறை கைது செய்தது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்ய ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த ஜாமின் மீதான வாதங்கள் நடைபெற்றது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வருகிற 17-ந்தேதி உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் 'சூடோபெட்ரைன்' என்ற போதைப்பொருளை கடத்திய வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்.
விசாரணையில் அவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணத்தை ஈட்டியதும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமையும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.






