சென்னையில் 13 மண்டலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 13 மண்டலங்களில் மார்ச் மாதத்தில் நீர்மட்டம் சரிவை கண்டுள்ளது.
சென்னையில் 13 மண்டலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது
Published on

சென்னை:

கோடை காலம் தொடங்குவதற்கு முன்னே சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 13 மண்டலங்களில் மார்ச் மாதத்தில் நீர்மட்டம் சரிவை கண்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் தகவலின்படி மணலி மற்றும் தேனாம்பேட்டை ஆகிய 2 இடங்களில் மட்டுமே முறையே 0.83 மீட்டர் மற்றும் 0.06 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மாதவரத்தில் அதிகபட்சமாக 1.86 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதை தொடர்ந்து திரு.வி.க. நகரில் 1.14 மீட்டர், சோழிங்க நல்லூரில் 0.95 மீட்டர் குறைந்துள்ளது.

ஆலந்தூரில் 0.44 மீட்டர், அடையாறில் 0.22 மீட்டர் பெருங்குடியில் 0.15 மீட்டர் நீர்மட்டம் சரிந்துள்ளது. வடசென்னையில் திருவொற்றியூரில் 0.2 மீட்டர் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நகரின் சராசரி நிலத்தடி நீர்மட்டம் பிப்ரவரி மாதத்தில் 4.32 மீட்டராக இருந்தது. மார்ச் மாதத்தில் 4.79 மீட்டராக குறைந்துள்ளது.

கோடை காலம் தொடங்கும்போது வெப்பநிலை அதிகரிப்பதாலும், மழை இல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் பொதுவாக குறையும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4.85 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 4.79 மீட்டராக உயர்ந்துள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்தாலும் புதிய ஆழ்துளை கிணறுகளுக்கான தேவை என்னும் குறைவாகவே உள்ளது என்று நீரியல் ஆய்வாளர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com