பயணிகள் கவனத்திற்கு., விரைவு ரெயில்கள் சேவையில் முக்கிய மாற்றம்

சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் மற்றும் செங்கோட்டை ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கவனத்திற்கு., விரைவு ரெயில்கள் சேவையில் முக்கிய மாற்றம்
Published on

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

* திருநெல்வேலி- சென்னை எழும்பூர் நெல்லை விரைவு ரெயில் (12632), ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

* ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (16752), நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

* ஐதராபாத்- தாம்பரம் சார்மினார் விரைவு ரெயில் (12760), இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.

* சென்னை எழும்பூர்- செங்கோட்டை பொதிகை விரைவு ரெயில் (12661), ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஏப்ரல் 22-ந்தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்படும்.

* சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் விரைவு ரெயில் (16751), ஏப்ரல் 7-ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்திலிருந்து இருந்து புறப்படும்.

* தாம்பரம்- ஐதராபாத் சார்மினார் விரைவு ரெயில் (12759), நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com