

சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அபின் தினேஷ் மோடக் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அருண் ஐபிஎஸ், தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் ஈடுபடக்கூடாது எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய ஆணையர் நாளை பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் சில முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.