1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்

21 மின்சார ரெயில்கள் அரக்கோணம்-திருவாலாங்காடு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்
Published on

சென்னை சென்ட்ரல் அரக்கோணம் மார்க்கத்தில் அரக்கோணம் யார்டில் ரெயில்வே பொறியியல் பணி நடக்க உள்ளதால் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

அரக்கோணம்-திருத்தணிக்கு ஜூன் 1 முதல் 5-ந் தேதி வரை அதிகாலை 4 மணி, 5 மணி நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள்,திருத்தணி -அரக்கோணத்திற்கு அதே நாட்களில் இரவு 9.15, 11.10, ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில்கள் திருத்தணி-சென்ட்ரலுக்கு அதே நாட்களில் காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆகிய 5 மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை-அரக்கோணத்திற்கு ஜூன் 1 முதல் 5-ந்தேதி வரை அதிகாலை 4.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், ஆவடி-அரக்கோணத்துக்கு அதே நாட்களில் காலை 6.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், சென்ட்ரல்-அரக்கோணத்திற்கு காலை 6.30மணி, 9.10 மணி, 10.30 மணி, 11 மணி, 12.40, மதியம் 1.25, பிற்பகல் 3.45, மாலை 4.45, 5.15, 5.45, 6.05, 6.40, இரவு 7.30, 7.45 8.20, 9.10, 10.00, 10.55 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில்கள் அரக்கோணம்-திருவாலாங்காடு இடையேய பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

21 மின்சார ரெயில்கள் அரக்கோணம்-திருவாலாங்காடு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. மொத்தம் 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. திருத்தணி- சென்ட்ரலுக்கு ஜூன் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை காலை 6.20 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளதாக சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com