மங்களூரு- சென்னை சென்டிரல் ரெயில் சேவையில் மாற்றம்

ஜூன் 2,4 ஆகிய தேதிகளில் 20 நிமிடம் தாமதமாகவும் சென்னை சென்டிரல் வந்தடையும்.
மங்களூரு- சென்னை சென்டிரல் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாலக்காடு கோட்டத்தில் நடைபெற இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக மங்களூரு சென்டிரல் -சென்னை சென்டிரல் இடையேயான வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மங்களூரு சென்டிரலில் இருந்து வருகிற 3,10,17,24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.22638), 1 மணி நேரம் தாமதமாகவும், வருகிற 5,7,12,14,19,21,26,28, ஜூன் 2,4 ஆகிய தேதிகளில் 20 நிமிடம் தாமதமாகவும் சென்னை சென்டிரல் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com