தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்- தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு ஆயுதப்படை ஏடிஜிபி-ஆக தினகரன் ஐபிஎஸ் நியமனம்.
TN Secretariat
Published on

தமிழகக் காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான 56 உயர் அதிகாரிகளை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அதிரடியாக பணி இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து மேலும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவராக சந்தீப் மிட்டல் நியமிக்கபப்ட்டு உள்ளார்.

மேலும், ஆயுதப்படை ஏ.டி.ஜி.பியாக தினகரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தீயணைப்பு ஆணைய தலைவராக சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com