

பல்கலைக்கழக வேந்தர் தொடர்பாக நான் கூறிய கருத்து திரித்து செய்தியாக வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
பல்கலைக்கழக வேந்தர் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு முதல்வர் கொள்கை முடிவெடுப்பர் என்று தான் கூறினேன்.
தற்போதுள்ள நிலை குறித்து நான் எந்த கருத்தும் கூறாதபோது சில ஊடகங்கள் திரித்து செய்தி வெளியீடப்பட்டுள்ளது.
மாநில உரிமைகளை பறிக்கிற வகையில் எனது கருத்து அமைந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது.
மாநில உரிமை பறிக்கும் வகையில் கருத்து கூறாதபோது இந்த வாதங்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.