நீலகிரியை தொடர்ந்து ஈரோடு ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி இயங்கவில்லை

நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடங்கள் வரை கேமராக்கள் இயங்கவில்லை.ஸ்ட்ராங் ரூமில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரியை தொடர்ந்து ஈரோடு ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி இயங்கவில்லை
Published on

நீலகிரியை தொடர்ந்து ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு பகுதியில் உள்ள ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி மன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடங்கள் வரை சில கேமராக்கள் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ட்ராங் ரூமில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com