ஆபாச படம் எடுத்து சர்வதேச கும்பலுடன் பகிர்ந்த விவகாரம்: பி.எச்.டி மாணவர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ அலுவலா்கள் பிடித்து விசாரணை நடத்தினா். தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆபாச படம் எடுத்து சர்வதேச கும்பலுடன் பகிர்ந்த விவகாரம்: பி.எச்.டி மாணவர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள பூண்டி தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் விக்டா் ஜேம்ஸ் ராஜா (வயது 35). இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ச்சி படிப்பு (பி.எச்.டி) படித்து வந்தார்.

இவர் சிறுமிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்தது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.

இதனை தொடர்ந்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ அலுவலா்கள் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் விக்டா் ஜேம்ஸ் ராஜா பல்வேறு நாடுகளில் உள்ள நண்பா்களுடன் இணைந்து சிறுமிகள் பாலியல் படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தாா். இதை இண்டா்போல் அமைப்பினரின் தரவுகளும் உறுதிப்படுத்தின. பாதிக்கப்பட்ட சிறுமிகளில் பெரும்பாலானவா்கள் 12 வயதுக்கு உள்பட்டவா்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, விக்டா் ஜேம்ஸ் ராஜா மீது போக்சோ, கூட்டு சதி, தகவல் தொழில்நுட்ப சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ அலுவலா்கள் வழக்குப்பதிவு செய்து, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜா்படுத்தினா். பின்னா், விக்டா் ஜேம்ஸ் ராஜா தஞ்சாவூா் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தஞ்சாவூரில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ அலுவலா்கள் தாக்கல் செய்தனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com