கல்குவாரி வெடி விபத்து- இருவர் மீது வழக்குப்பதிவு

கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்குவாரி வெடி விபத்து- இருவர் மீது வழக்குப்பதிவு
Published on

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே உள்ள கீழ உப்பிலிக்குண்டு கிராம பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த கல்குவாரியில் இன்று நிகழ்ந்த எதிர்பாராத வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

குவாரியில் உள்ள குடோனில் வெடி மருந்துகளை இறக்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. கல்குவாரியை மூட வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெடி விபத்து தொடர்பாக இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில், குவாரியின் உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் சேது என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com