பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் தீக்காயமடைந்த 2 தொழிலாளர்கள் பலி: உரிமையாளர்-போர்மேன் மீது வழக்கு

மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். 80 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் தீக்காயமடைந்த 2 தொழிலாளர்கள் பலி: உரிமையாளர்-போர்மேன் மீது வழக்கு
Published on

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கோட்டைப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று காலை ஊழியர்கள் ஆலையில் உள்ள தனி அறையில் திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வெடி மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியது. இதில் அறையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கரமாக வெடித்தது.

இந்த விபத்தில் தொழிலாளர்கள் கட்ட நாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (40) ஆகியோர் உடல் கருகினர். 80 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பசாமி, முத்துப்பாண்டி ஆகிய இருவரும் இன்று காலை பரிதாபமாக இறந்தனர். வெடி விபத்து தொடர்பாக வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் ரமேஷ், போர்மேன் சுப்புராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com