தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்... பொதுமக்கள் அஞ்சலி... மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்

மதியம் ஒரு மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.மாலை 4.45 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்... பொதுமக்கள் அஞ்சலி... மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்
Published on

தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வீட்டிற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது உடல் கேயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார். தொண்டர்கள், ரசிகர்கள் அதிக அளவில் கூடியாதால் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி தேமுதிக தலைமையகத்தில் இருந்து அவரது உடல் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூடியிருந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 6 மணியளவில் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டு, விஜயகாந்த் உடல் அங்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெறும். பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக இறுதி ஊர்வலம் தேமுதிக தலைமையகம் சென்றடைந்து, அங்கு மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com