சென்னையில் தீவிர சோதனை.. பவுடர் வடிவில் தாய்ப்பால்.. தட்டித்தூக்கிய அதிகாரிகள்

50 மி.லி. அளவில் தாய்ப்பால் அடைத்து வைக்கப்பட்டிருந்த 180 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 50 மி.லி. தாய்ப்பால் ரூ.900 முதல் ரூ.1239 வரை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தீவிர சோதனை.. பவுடர் வடிவில் தாய்ப்பால்.. தட்டித்தூக்கிய அதிகாரிகள்
Published on

சென்னை:

சென்னை அரும்பாக்கம் ஆர்.கே. பார்மா நிறுவனத்தில் தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்வதை அறிந்து உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 50 மி.லி. அளவில் தாய்ப்பால் அடைத்து வைக்கப்பட்டிருந்த 180 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தாய்ப்பாலை பவுடராக மாற்றி ஷேஷேயிலும் அடைத்து விற்பனை செய்வதும், 50 மி.லி. தாய்ப்பால் ரூ.900 முதல் ரூ.1239 வரை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாதவரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அரும்பாக்கத்தில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com